பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் கண்டிப்பாக பணிக்கு வருமாறு போக்குவரத்துத்துறை உத்தரவு: மீறினால் ஒழுங்கு நடவடிக்கை..!

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் கண்டிப்பாக பணிக்கு வருமாறு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. நாளை அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தில் பஸ் ஊழியர்கள் பங்கேற்று பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 14-வது ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்றக்கோரி நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.தமிழக போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், பணிச்சுமை குறைப்பு போன்ற கோரிக்கைகளை பல நாட்களாக நிர்வாகத்திடம் எழுப்பி வருகின்றனர்.  இது குறித்து நடந்த பல கட்ட பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன.இதையொட்டி நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தைத் தொடங்க உள்ளனர்.   காலவரையற்ற இந்த வேலை நிறுத்தத்தின் போது தொழிலாளர்கள் பேருந்துகளை இயக்கப்போவதில்லை என அறிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 9 போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் பங்கேற்றுள்ளனர்….

Related posts

புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை

96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்