பழைய வாகனத்தை ‘அழித்து’, புதிய வாகனம் வாங்கினால் சாலை வரியில் 25 சதவீதம் வரை தள்ளுபடி : ஒன்றிய அரசின் அசத்தல் அறிவிப்பு!!

டெல்லி : பழைய வாகனத்தை அழித்துவிட்டு புதிய வாகனம் வாங்குபவர்களுக்கு சாலை வரியில் 25 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சுற்றுசூழலில் அதிகம் அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் பழைய வாகனங்களை அழிப்பதற்காக வாகன அழிப்புக் கொள்கையை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. ஒன்றிய அரசின் புதிய தேசிய ஆட்டோமொபைல் ஸ்கிராபேஜ் கொள்கை., 20 ஆண்டுகளுக்கும் மேலாகபயன்பாட்டில் இருக்கும் தனிநபர்வாகனங்களும் 15 ஆண்டுகளுக்கு மேலான வர்த்தக வாகனங்களும் தகுதி சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அவற்றில் தேர்ச்சியடையாத வாகனங்களை அழிக்க வேண்டும். ஸ்கிராப்பிங் மையத்தில் வாகனத்தை அழித்தற்கான சான்றிதழ் வழங்கப்படும். இந்தச் சான்றிதழைக் காட்டி புதிய வாகனம் வாங்கும்போது அதன் விலையில் 5 சதவீதம் அளவில் தள்ளுபடி பெற்றுக்கொள்ளலாம் என்று ஒன்றிய சாலைப் போக்குவரத்து துறைஅமைச்சகம் முன்பு அறிவித்திருந்தது.இந்நிலையில் மாநில அரசால் சாலை வரியிலும் 25 சதவீதம் வரையில் தள்ளுபடி வழங்கப்படும் என்று ஒன்றிய அமைச்சகம் கூறியுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தனிநபர் வாகனங்களுக்கு சாலை வரியில் 25 சதவீதம் வரையிலும், வர்த்தக பயன்பாட்டு வாகனங்களுக்கு 15 சதவீதம் வரையிலும் வாகன வரியில் சலுகை அளிக்கப்படும் என்று கூறியுள்ளது. மேலும் இந்தச் சலுகை வர்த்தக பயன்பாட்டு  வாகனங்களாக இருந்தால் எட்டு ஆண்டுகள் வரையும், தனி நபர் பயன்பாட்டு வாகனங்களாக இருந்தால் 15 ஆண்டுகள் வரையும் கிடைக்கும் என்றும் இது 2022 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது. …

Related posts

நில முறைகேடு வழக்கில் சட்ட விரோத பணப் பரிமாற்றம்; சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்கு: முதல்வர் பதவிக்கு ஆபத்து

கடவுளை அரசியலில் இருந்து தள்ளிவையுங்கள் திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டுவதா..? முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

பிரபல மலையாள சினிமா டைரக்டர் பாலச்சந்திர மேனன் மீது நடிகை பலாத்கார புகார்: குரூப் செக்சுக்கும் கட்டாயப்படுத்தினார்