பழைய காரை 8 ஆண்டுகள் பயன்படுத்தி விட்டார் பிரதமர் மோடிக்கு வாங்கிய கார் விலை ₹3.5 கோடிதான்: அரசு அதிகாரிகள் விளக்கம்

புதுடெல்லி: பிரதமர் மோடி பயணம்  செய்வதற்காக ரேஞ்ச் ரோவர், டொயட்டோ லேண்ட் குரூசர் மற்றும் பிஎம்டபிள்யூ ஆகிய அதிக பாதுமிக்க கார்களை பயன்படுத்தி வந்தார். இந்நிலையில், இவர் பயன்படுத்துவதற்காக புதிதாக 2 மெர்சிடெஸ் மேபேக் எஸ் 650 என்ற அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கார் வாங்கப்பட்டுள்ளது. இந்த கார் ஒன்றின் விலை ரூ.12 கோடி என குறிப்பிடப்பட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இந்நிலையில், மோடியின் பயணத்திற்காக வாங்கப்பட்டுள்ள அதிநவீன காரின் விலையானது சமூக ஊடகங்களில் குறிப்பிட்டத்தை விட மிகவும் குறைவு என்றும், அதில் மூன்றில் ஒரு பங்குதான் காரின் விலை (ரூ.3.5 கோடி மட்டுமே) என்றும் அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.புதிதாக வாங்கப்பட்டுள்ள காரில் புதிய பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்படவில்லை என்றும்,  இது வழக்கமாக வாகனத்தை மாற்றும் நடைமுறை தான் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மோடி பயன்படுத்தி வந்த பிஎம்டபிள்யூ கார்கள் தயாரிப்பதை அந்த நிறுவனம் நிறுத்தி உள்ளதால், அதற்கு மாற்றாக மெர்சிடெஸ் மேபேக் எஸ்650 கார் தேர்வு செய்யப்பட்டதாக பாதுகாப்பு குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ‘ஜனாதிபதி, பிரதமர் போன்றவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் தேசிய கமாண்டோ படை,  தலைவர்கள் பயன்படுத்தும் வாகனங்களை 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றுவது என்ற விதிமுறையை பின்பற்றுகிறது. இதற்கு முன் இருந்த கார்களை பிரதமர் மோடி 8 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளார். பாதுகாப்பு தணிக்கையின்போது இந்த விவகாரம் கவலையை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் பயன்படுத்தும் காரை வாங்கும் முடிவுகள், பாதுகாப்பு அச்சுறுத்தலின் அடிப்படையில் எடுக்கப்படுகின்றன.  புதிய கார் வாங்குவது பற்றி பிரதமர் மோடியிடம் பாதுகாப்பு குழு கருத்து கேட்கவில்லை,’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர்….

Related posts

மேற்குவங்கத்தில் பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?