பழைமையான குடியிருப்பு பகுதிகளை கண்டறிந்து பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்: அரசுக்கு சசிகலா வேண்டுகோள்

சென்னை: தமிழகத்தில் பழைமையான குடியிருப்பு பகுதிகளை கண்டறிந்து அரசு பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: திருவொற்றியூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள 24 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து இருப்பது மிகவும் வேதனையாக உள்ளது. தங்கியிருந்தவர்கள் முன்பே கட்டிடத்தை விட்டு வெளியேறியதால் நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் ஏற்படாமல் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஆனால், குடியிருப்பவர்கள் அனைவரும் தங்கள் உடமைகள் அனைத்தையும் இழந்து நிர்கதியாய் இருக்கின்றனர். அவர்களுடைய அத்தியாவசிய தேவைகளான உணவு, உடை மற்றும் தங்கும் இடம் போன்றவற்றை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும். இதேபோல், வேலூர் மாவட்டத்தில் சில இடங்களில் கடந்த வாரத்திலிருந்து தொடர்ந்து நில அதிர்வு ஏற்பட்டு வருவதாகவும், இதில், இருபதுக்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. எனவே, இந்த குடியிருப்பில் உள்ளவர்களுக்கு மாற்று இடம் வழங்குவதோடு, அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு உரிய பாதுகாப்பையும் தமிழக அரசு வழங்க வேண்டும். மேலும், குடிசை மாற்று வாரியத்தை சேர்ந்த மிகவும் பழைமையான குடியிருப்பு பகுதிகளை கண்டறிந்து தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

Related posts

செத்தாலும் ஏர்போர்ட்டில் இனி பேச மாட்டேன்: டெல்லி செல்லும் முன் அண்ணாமலை பேட்டி

பட்டியல் இனத்தவர் உள்ஒதுக்கீடு: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு தலைவர்கள் வரவேற்பு

அதிமுக ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு