பழுதடைந்த அங்கன்வாடி மையத்தை அதிகாரிகள் ஆய்வு

காரிமங்கலம், செப்.13: காரிமங்கலம் அருகே பேகாரஅள்ளி ஊராட்சியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த கட்டிடத்தின் சிமெண்ட் சீட்டுகளால் ஆன மேற்கூரை சேதம் அடைந்ததால், மழைக்காலங்களில் மழை நீர் அங்கன்வாடி மையத்திற்குள் புகுந்து குழந்தைகள் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இது குறித்து தினகரன் நாளிதழில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து கலெக்டர் சாந்தி உத்தரவின் பேரில், பிடிஓ கணேசன், நீலமேகம், உதவி செயற்பொறியாளர் அருள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், பழுதடைந்த அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு, அதை சீரமைப்பது தொடர்பாக ஆய்வு செய்தனர். சீரமைப்பு பணிகள் தொடர்பாக கலெக்டருக்கு அறிக்கையை அனுப்பி, விரைவில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் குழந்தைகளின் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்