பழநி முருகன் கோயிலில் ரூ.2.99 கோடி உண்டியல் வசூல்

பழநி: பழநி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.2.99 கோடி வசூலானது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கடந்த 20 நாட்களுக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் கடந்த 2 நாட்களாக நடந்தது. கோயில் ஊழியர்கள், வங்கி அலுவலர்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.இதில் ரொக்கமாக ரூ.2 கோடியே 99 லட்சத்து 49 ஆயிரத்து 765 கிடைத்தது. இதுதவிர தங்கம் 930 கிராம், வெள்ளி 13,741 கிராம், வெளிநாட்டு கரன்சி 448 ஆகியவை கிடைத்தன. உண்டியல் எண்ணும் பணியை அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுரேஷ், பழநி கோயில் இணை ஆணையர் நடராஜன் உள்ளிட்டோர் மேற்பார்வையிட்டனர்….

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி