பழநி-திருப்பதிக்கு வந்தே பாரத் ரயில் சேவை ரயில் பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை

பழநி, ஜூன் 1: பழநி-திருப்பதிக்கு வந்தே பாரத் ரயில் சேவை ஏற்படுத்த வேண்டுமென ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.ரயில்வேதுறை பொது மேலாளருக்கு பழநி ரயில் பயன்படுத்துவோர் நலச்சங்கத்தினர் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,தென்னந்தியாவில் உள்ள முக்கிய கோயில்கள் திருப்பதி மற்றும் பழநி ஆகியவை ஆகும். இக்கோயில்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்பதியில் இருந்து காட்பாடி, சேலம், திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி மற்றும் கோவை வழியாக 8 ரேக்குகள் கொண்ட வந்தே பாரத் விரைவு ரயிலை அறிமுகம் செய்ய வேண்டும். இதனால் பக்தர்கள், மாணவர்கள், தொழிலதிபர்கள், விவசாயிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் என தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு பயணிக்கும் அனைத்து தரப்பினரும் பயனடைவர். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை