பழநி கோயில் மலையடிவாரத்தில் விதிமீறி நிறுத்தப்படும் வாகனங்கள்

பழநி: பழநியில் சுற்றுலா பஸ்நிலையத்தை புறக்கணித்து சாலையோரம் வாகனங்களை நிறுத்தும் பக்தர்களால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகின்றது. பழநியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயில், அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக அழைக்கப்படுகிறது. இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களின் வாகனங்கள் சாலையோரங்களில் நிறுத்தியதால், அடிவார பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.இதனால், பழநி அடிவாரத்தில் உள்ள கிழக்கு மற்றும் மேற்கு கிரி வீதிகளில் கோயில் நிர்வாகம் சார்பில் சுற்றுலா பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால், பழநி வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை இந்த பஸ் நிலையங்களில் நிறுத்தாமல் கிரி வீதி, அருள்ஜோதி வீதி, அய்யம்புள்ளி சாலை மற்றும் வையாபுரி குளம் பைபாஸ் சாலைகளில் நிறுத்துகின்றனர். இதனால், கூட்ட நேரங்களில் கடும் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.எனவே, காவல்துறையினர் இப்பகுதிகளில் கூட்ட நேரங்களில் ரோந்து சென்று சாலையோரங்களில் நிறுத்தும் வாகனங்களை சுற்றுலா பஸ் நிலையத்தில் நிறுத்தி முறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

ஆன்லைன் ரம்மி விசைத்தறி அதிபர் தற்கொலை

ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் தேடப்படும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆதரவாளர்கள் வீடுகளில் ரெய்டு: கரூரில் சிபிசிஐடி அதிரடி

வேறொருவருடன் நாளை மறுதினம் திருமணம் வீட்டின் சுவர் ஏறி குதித்து காதலனை கரம் பிடித்த பெண்