பழநி கோயிலில் ரூ.2 கோடி வசூல்

பழநி: பழநி கோயிலில் நடந்த உண்டியல் எண்ணிக்கையில் ரூ.2.61 கோடி வசூலானது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கடந்த 20 நாட்களுக்கான உண்டியல் எண்ணிக்கை மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் நேற்று துவங்கியது. இதில் ரொக்க பணமாக ரூ.2 கோடியே 61 லட்சத்து 95 ஆயிரத்து 700 கிடைத்தது. தங்கம் 871 கிராம், வெள்ளி 27 ஆயிரத்து 30 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 221 ஆகியவை கிடைத்தது. உண்டியல் எண்ணும் பணியை பழநி கோயில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்பார்வையிட்டனர்.திருப்பரங்குன்றம்திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பக்தர்கள் வழங்கிய உண்டியல் காணிக்கை மாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம். இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில் கோயில் துணை ஆணையர் கலைவாணன், உதவி ஆணையர் விஜயன், மீனாட்சி அம்மன் கோயில் கண்காணிப்பாளர் ஜெயமாலா உள்ளிட்ட அலுவலர்கள், கோயில் ஊழியர்கள் மற்றும் வேத பாடசாலை மாணவர்கள் ஈடுபட்டனர். நேற்று காலை முதல் மாலை வரை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ரூ.39 லட்சத்து 27 ஆயிரத்து 295 ரொக்கம், 204 கிராம் தங்கம், 1 கிலோ 940 கிராம் வெள்ளி காணிக்கையாக இருந்ததாக கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது….

Related posts

மழைநீர் கால்வாய் உடைந்து சுரங்கப்பாதையில் நீர் கசிவு: வாகன ஓட்டிகள் அவதி

திருவொற்றியூர் 7வது வார்டில் ₹27 லட்சம் செலவில் தெருவிளக்கு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

கானத்தூர் முதல் மாமல்லபுரம் வரை இசிஆரில் சைக்ளோத்தான் போட்டி: 1300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு