பழநி அருகே திடீர் பரபரப்பு பயணிகளுடன் சென்ற அரசு பஸ் டயர் கழன்றது

பழநி, ஜூன் 4: பழநியில் இருந்து அமரபூண்டி மார்க்கமாக நேற்று தீர்த்தாக்கவுண்டன்வலசு கிராமத்துக்கு சென்ற டவுன் பஸ்சின் டிரைவராக நீதிப்பாண்டியன், கண்டக்டராக தண்டபாணி ஆகியோர் இருந்தனர். பஸ் அமரபூண்டி கிராமத்தை கடந்து சென்றபோது, சுமார் 10 பயணிகள் இருந்தனர். வேப்பன்வலசு அருகே, திடீரென பஸ்சின் முன்பக்க டயர் கழன்று ஓடியது. இதையடுத்து பஸ் கட்டுப்பாட்டை இழந்தது. இருப்பினும் டிரைவர் சாதுர்யமாக செயல்பட்டு பஸ்சை நிறுத்தினார்.

பின்னர் பஸ்சில் இருந்த அனைவரும் இறங்கி வந்த பார்த்தபோது, அருகே இருந்த கழிவுநீர் கால்வாயில் டயர் கிடந்தது. இதுகுறித்து பழநி போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் பழுதடைந்த பஸ்சில் இருந்த பயணிகள், மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் பழுது சரி செய்யப்பட்டு பழநி போக்குவரத்துக்கழக டெப்போவிக்கு கொண்டு செல்லப்பட்டது. பழநி அருகே ஓடும் பஸ்சின் டயர் கழன்று ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் டிரைவர் சாதுர்யத்தால் விபத்து தடுக்கப்பட்டது.

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்