பழநியில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் மறியல்

பழநி, ஜூலை 20: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்ய செல்லும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். பழநி கோயிலில் உள்ள காலி பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அடிவாரம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அடிவார பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியில்லையென காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்து அமைப்பினர் சிலர் அடிவார பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அனுமதி வழங்குவதில் போலீசார் பாரபட்சம் காட்டுவதாக கூறி நேற்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின் சார்பில் பழநி காவல் நிலையத்தை முற்றுகையிட சென்றனர். ஆனால், போலீசார் புது தாராபுரம் சாலையில் போராட்டக்காரர்களை தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். இதை தொடர்ந்து புது தாராபுரம் சாலையிலேயே மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சமரசம் அடைந்த பின்பே அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து