பழங்குடியினர் சூழல் காட்சியகத்தில் கைவினை பொருட்கள் விற்பனை ஜோர்

 

ஊட்டி, ஆக. 4: ஊட்டி அருகேயுள்ள சூட்டிங்மட்டம் நுழைவுவாயில் பகுதியில் அமைந்துள்ள பழங்குடியினர் சூழல் காட்சியகத்தில் பொருட்கள் வாங்கி செல்ல சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். ஊட்டி-கூடலூர் சாலையில் சூட்டிங்மட்டம் பகுதி உள்ளது. இப்பகுதி அழகிய புல்வெளிகளையும், ஆங்காங்கு சோலை மர காடுகளையும் கொண்டுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த இடத்தை ஊட்டிக்கு வர கூடிய சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்வது வழக்கம். பல்வேறு மொழி சினிமா படப்பிடிப்புகள் நடந்து உள்ளன.

இதனால் இப்பகுதி சூட்டிங்மட்டம் என்ற பெயர் பெற்றது. நீலகிரி வன கோட்டத்திற்கு உட்பட்ட இப்பகுதி தோடர் இன மக்களை உறுப்பினர்களாக கொண்ட பகல்கோடுமந்து சூழல் மேம்பாட்டு குழு மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. நுழைவாயில் பகுதியில் தோடர் பழங்குடியின மக்களின் குடியிருப்பு அமைக்கப்பட்டு அலங்கார வளைவு அமைக்கப்பட்டு உள்ளது. நீலகிரி வனப்பகுதியில் வாழும் வரையாடு, சிறுத்தை, மலபார் அணில் மற்றும் பறவைகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.

இதுதவிர நுழைவு வாயில் பகுதியில் டிரைபல்ஸ் இகோ கேலரி எனப்படும் பழங்குடியினர் சூழல் காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பழங்குடியினர் பாரம்பரிய பொருட்கள் காட்சிப்படுத்தப்படுவதுடன், அவர்களின் கைவினை பொருட்கள் விற்பனைக்கு வைக்கபட உள்ளன. சூட்டிங் மட்டத்தை காண வரும் சுற்றுலா பயணிகள் இம்மையத்திற்கு வந்து கைவினை பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை