பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் யோகா மாஸ்டர் கைது

சென்னை: வண்ணாரப்பேட்டை மாநகராட்சி பள்ளியில் இலவச யோகா பயிற்சி நடத்தி, மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கோடம்பாக்கத்தை சேர்ந்த யோகா மாஸ்டர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த யோகா மாஸ்டர் சந்தானம் (57). இவர், அரசு அனுமதி இல்லாமல் கடந்த 7 ஆண்டுகளாக யோகா பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார். மேலும், பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக யோகா கற்றுத் தருவதாக மாநகராட்சியில் அனுமதி பெற்று மாநகராட்சி பள்ளியில் யோகா வகுப்புகள் நடத்தி வந்துள்ளார்.இந்நிலையில், கடந்த வாரம் வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் தேதி முதல் 17ம் தேதி வரை 5 நாட்கள் மதியம் ஒரு மணியிலிருந்து 2 மணி வரை 10, 11, 12ம் வகுப்பு மாணவிகளுக்கு யோகா பயிற்சி வகுப்பு நடத்தி வந்துள்ளார். அப்போது, யோகா கற்று தருகிறேன் என்ற பெயரில் அங்கிருந்த மாணவிகளிடம் தகாத முறையில் பேசி ஒருசில மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.இதுகுறித்து மாணவிகள் ஆசிரியரிடம் கூறியுள்ளனர். பின்னர், ஆசிரியர்கள் ராயபுரத்தில் உள்ள குழந்தைகள் நல வாரிய குழு உறுப்பினர் லலிதாவிற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், அவர் விசாரணை செய்து, வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். ஆய்வாளர் பிரியதர்ஷினி வழக்குப்பதிவு செய்து மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசி பாலியல் தொந்தரவு கொடுத்த யோகா மாஸ்டர் சந்தானத்தை கைது செய்து விசாரணை நடத்தினர். அதை தொடர்ந்து குழந்தைகள் நல அமைப்பினர் விசாரணை நடத்தினர். பின்னர், யோகா மாஸ்டர் சந்தானத்தை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்