பள்ளிப்பட்டு அருகே அர்ஜுனன் தபசு

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி நடந்தது. பள்ளிப்பட்டு அருகே பொம்மராஜபேட்டையில் திரௌபதி அம்மன் ஆலய தீமிதித் திருவிழா மார்ச் 27ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் பகல் நேரங்களில் மகாபாரத சொற்பொழிவு, இரவில் தெருக்கூத்து நடைபெற்றுவருகிறது. நேற்று காலை அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிராம மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

கோயில் வளாகத்தில் நடப்பட்ட தபசு மரத்தின் மீது, அர்ஜுனன் வேடமிட்ட நாடக கலைஞர் ஏறி பாடல்கள் பாடிக்கொண்டு உச்சிக்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த பழங்களை எடுத்து கோயில் முன் கூடியிருந்த மக்கள்மீது வீசினார். அவற்றை கைப்பற்ற பெண்கள், இளைஞர்கள் போட்டி போட்டனர். வரும் 9ம் தேதி மாலை தீமிதித் திருவிழா நடைபெறுகிறது.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்