பளபளக்கும் பாத மருதாணி!

மருதாணி… இந்த வார்த்தைக்கே தனி ஈர்ப்பு உண்டு. வட இந்திய திருமணங்களில் மெஹந்தி வைப்பதற்காகவே தனியாக ‘சங்கீத்’ நிகழ்ச்சி நடத்துகிறார்கள். ஆடல் பாடல், கச்சேரியுடன் மணப்பெண்ணுக்கு மெஹந்தி வைக்கப்படும். இந்தக் கலாசாரம் இப்போது தென்னிந்திய திருமணங்களிலும் தென்படத் தொடங்கியுள்ளது. கை, கால்கள் என மெஹந்தியால் நிரப்புகிறார்கள். இதன் அடுத்த கட்டம்தான் கால் மற்றும் பாதங்களில் மெஹந்தி இட்டுக் கொள்வது!இன்றைய தலைமுறைகளின் ஸ்பெஷல் பீச் திருமணங்கள், அவுட்டோர் பார்ட்டி மணவிழாக்களில் பிள்ளையார் சுழிக்கு அடுத்தபடியாக எழுதப்படுவது இந்த பாத மெஹந்திதான். கடற்கரை மணலில் மாப்பிள்ளை, பெண்ணின் பாதங்கள், பூக்களுடன் கூடிய மணப்பெண்ணின் காலடிகள்… என கற்பனைகள் சிறகடித்துப் பறக்கின்றன. ‘நம்ம பாதங்கள்ல சென்சிடிவ் ஆன ஸ்கின் டோன் இருக்கு. அங்க மெஹந்தி கோன் வெச்சு இழுத்தா எப்படியிருக்கும்? அந்தப் பொண்ணோட ரியாக்‌ஷனை கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க…’’ என கண்சிமிட்டுகிறார் செலிபிரிட்டி மேக்கப் ஆர்டிஸ்ட் ஸ்ரீதேவி ரமேஷ். “எனக்கு இன்னும் பாதங்கள்ல வரையச் சொல்லி கஸ்டமர்ஸ் வரல. ஆனா, இந்த டிரெண்டு இப்ப இந்தியத் திருமணங்கள்ல பரவி வருது.மெஹந்தி நிகழ்ச்சிகள்ல ‘முதல் கோடு’ மாப்பிள்ளைதான் வரைவாரு. இப்ப மாப்பிள்ளை கைல கோன் கொடுத்து பாதங்கள்ல ‘கோடு’  போடச் சொல்றாங்க. பாதத்துல கோன் நுனி டச் பண்ணதும் மணப்பெண் வெட்கப்பட்டு சிரிப்பாங்க, நெளிவாங்க, காலை இழுத்துப் பாங்க. இந்தத் தருணங்கள்லாம் புகைப்பட ஆல்பத்துல, வீடியோக்கள்ல பார்க்கிறப்ப ஸ்பெஷல் மொமெண்ட்டா தெரியும்.முக்கியமா மெஹந்தி ஆர்டிஸ்ட்டுக்கு பெரிய திருப்தி. ஏன்னா மாப்பிள்ளைய வரையச் சொன்னா அவரு இஷ்டத்துக்கு கிறுக்கி வெச்சுட்டுப் போயிடுவார். நாங்க அதையே டிசைனா மாத்தி அட்ஜெஸ் பண்ணுவோம். எங்க கிரியேட்டிவிட்டிக்கு இது சவாலா இருக்கும். சிலர் அழிச்சுட்டு புதுசா போடச் சொல்வாங்க. வேறு சிலரோ சம்பிரதாயம்னு சொல்லி அழிக்க விடமாட்டாங்க.பட், பாதத்துல ஒரு அட்வான்டேஜ் உண்டு. மாப்பிள்ளை என்ன கிறுக்கினாலும் பெரிய அளவுல அது எடுபடாது. புகைப் படங்கள் கூட ஒண்ணோ, ரெண்டோ எடுப்பாங்க. சுலபமா இருக்கும். என்ன, கால்ல மெஹந்தி போடறப்ப நிறைய ரிஸ்க் இருக்கு. கை மாதிரி கால்களை சுலபமா திருப்ப முடியாது. 12 மணிநேரம் தண்ணி படக்கூடாது. அதனால இடத்தை விட்டு அசையவும் கூடாது.இதனாலயே சில பெண்கள் இந்த பாத மெஹந்திய தவிர்த்துடறாங்க. உடைகளையும் சரியான முறைல போட்டுக்கணும். இதையெல்லாம் மீறி பாதங்கள்ல வரையறதை இப்ப நிறைய கேர்ள்ஸ் விரும்பறாங்க. அதுவும் நம்ம கல்யாணங்கள்ல அம்மி மிதிக்கிற சடங்கப்ப அடிப் பாதமும் தெரியும். அப்ப இந்த கால் மெஹந்தி பாதங்களை அழகா காட்டும். கால் மடிச்சு உட்கார்ந்து மந்திரம் சொல்றப்ப கூட இந்த மெஹந்தி பொண்ணோட பாதங்களை ஹைலைட் பண்ணும்.முக்கியமா குடத்துல மோதிரம் போட்டு விளையாடுவாங்களே அப்போ பொண்ணும் மாப்பிள்ளையும் முட்டி போடுவாங்க; புகைப்படக்காரரும் மேல இருந்து ஃபோகஸ் பண்ணுவாரு. அப்ப பெண்ணோட கால் ரொம்ப அழகா இருக்கும்…’’ என்று விவரித்த ஸ்ரீதேவி ரமேஷ், மருத்துவ ரீதியாகவும் இது நல்லது என்கிறார். ‘‘அரேபிய பெண்கள் இப்படி பாதங்கள்ல போட்டுக்கற மருதாணிய அதிகம் விரும்பறாங்க. காரணம், பித்த வெடிப்ப கூட மருதாணி சரி செய்யும். பரதம் ஆடுற பெண்கள், கால்களுக்கு அதிக வேலை தருவாங்க. அதனாலயே கால் மெஹந்தியை அதிகம் விரும்பறாங்க. மேலும் பழங்கால அக்குபங்சர் மருத்துவ முறையிலே உடல் நோய்கள் பலவற்றுக்கும் ஆணிவேர் கால் பாதங்களுடைய பாயின்ட்கள்லதான் தீர்வு இருக்கு. அங்கே மருதாணி வைக்கும் பொழுது பாயின்ட்கள் தூண்டப்பட்டு உடல் பிரச்னைகள் பலவும் குணமாகுற வாய்ப்புகள் உண்டு. அக்னி முன்னாடி உட்கார்ந்து சடங்கு பண்றப்ப உண்டாகுற உடல்சூட்டு பிரச்னைகளையும் இது மட்டுப்படுத்தும். அதே மாதிரி ஃபேஷியல், ப்ளீச் மாதிரி பெண்கள் செய்துப்பாங்க. ஆனா, சில பிரச்னைகளுக்கு பயந்து மெனிக்யூர், பெடிக்யூர் சில பெண்கள் மட்டுமே செய்வாங்க. கால்கள்ல மெஹந்தி போட்டுக்கிட்டா அவங்க பயப்படற பிரச்னைகள் ஏற்படாது…’’என்கிறார்  ஸ்ரீதேவி ரமேஷ்.தொகுப்பு : ஷாலினி நியூட்டன்

Related posts

பெண்களின் ஆரோக்கியத்தில் பெரும்பங்காற்றும் பூசணி விதை!

உடலுக்கு செம்மை சேர்க்கும் செம்பு பாத்திரம்!

பானி பூரி கீ செயின், டீ கிளாஸ் நெக்லஸ் , கப் கேக் தோடு… கலக்கும் மினியேச்சர்கள்!