பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஆக. 7: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காசில்லா மருத்துவத்தை அமல்படுத்த வேண்டும், சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர் ஓய்வூதியர் அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும்.

மேலும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழ்நாட்டில் மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் மாயன் குட்டி, பல்லடம் வட்ட கிளை தலைவர் பழனிச்சாமி, ஊத்துக்குளி வட்ட கிளை செயலாளர் பாஸ்கரன், அவிநாசி வட்ட கிளை தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலை மற்றும் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்