பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த 4 பேர் அதிரடி கைது: போலீசார் நடவடிக்கை

சென்னை: பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த 4 குற்றவாளிகளை கைது செய்யப்பட்டனர். சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி, சென்னை பெருநகரில், குற்றப் பின்னணி நபர்களின் குற்றச் செயல்களை ஒடுக்கி, குற்றமில்லா சென்னை நகரமாக மாற்ற சிறப்பு சோதனைகள் மேற்கொண்டு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் மற்றும் குற்றப் பின்னணி நபர்களுக்கு எதிராக சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், 13 சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகளிடம் திருந்தி வாழ்வதற்கு நன்னடத்தை பிணை பத்திரம் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக  தலைமறைவாகியிருந்த ஒரு குற்றவாளி மற்றும் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதுவரை 2,272 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை பத்திரம் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 443 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை காவல்துறையினர் தொடர்ந்து இது போன்ற சிறப்பு சோதனைகள் மேற்கொண்டு வருவதால், குற்றச் செயல்களில் ஈடுபடும் போக்கிரி குற்றவாளிகள் மற்றும் குற்ற பின்னணி நபர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். …

Related posts

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

மேட்ரிமோனியல் மூலம் டிஎஸ்பி, பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள்

பேரனுக்கு பதிலாக நடந்த மூதாட்டி கொலை வழக்கில் உறவுக்கார பெண் சிக்கினார்