பல்லவாடா ஊராட்சியில் 100 சதவீத தடுப்பூசி: கலெக்டர் பாராட்டு

கும்மிடிப்பூண்டி: பல்லவாடா ஊராட்சியில் 100 சதவீத கொரோனா தடுப்பூசி போட்டு சாதனைபடைத்துள்ளனர். இதனை கலெக்டர் பாராட்டினார். கும்மிடிப்பூண்டி அருகே பல்லவாடா ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை, ஊராட்சி  தலைவர் பி.லட்சுமி பன்னீர்செல்வம் ஊக்குவித்து, அப்பகுதி மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இதையொட்டி, ஊராட்சியில் தொடர்ந்து முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் அதிகளவு தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் 100 சதவீத தடுப்பூசி போட்ட பல்லவாடா ஊராட்சி உள்பட 37 ஊராட்சி தலைவர்களை பாராட்டி, நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் தலைமை வகித்தார். எஸ்பி வருண்குமார் முன்னிலை வகித்தார். இதில் பல்லவாடா ஊராட்சியில் 100 சதவீத தடுப்பூசி போட்டதற்காக ஊராட்சி தலைவர் பி.லட்சுமி பன்னீர்செல்வத்தை பாராட்டி, கலெக்டர் நற்சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுதேவன், நடராஜன் ஆகியோர் பங்கேற்றனர். கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட 61 ஊராட்சிகளில்  முதன் முதலாக 100 சதவீத தடுப்பூசி போட்டு பல்லவாடா ஊராட்சி நற்பெயரை பெற்றதை தொடர்ந்து, ஊராட்சி  தலைவர் பி.லட்சுமி பன்னீர்செல்வத்தை கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், ஒன்றிய பொறியாளர் நரசிம்மன் ஆகியோர் பாராட்டினர்….

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்