பல்லடத்தில் மின் வாரிய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 

பல்லடம், டிச.29: பல்லடம் டி.என்.இ.பி. எம்ப்ளாயீஸ் பெடரேஷன் கிளை சார்பில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் பல்லடம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது. டி.என்.இ.பி. எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில் குடும்ப நல நிதி ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாகவும் மற்றும் பயணப்பட்டியல் 75 சதவீதத்தில் இருந்து 100 சதமாக தமிழ்நாடு அரசு உயர்த்தி வழங்கியுள்ளதை மின்சார வாரியம் உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஈட்டிய விடுப்பை பணமாக்கும் முறையை அனுமதிக்க வேண்டும்.

புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மேலும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும். காலி பணியிடகளில் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லடம் மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமையில் மாவட்ட தலைவர் அங்குராஜ் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சங்க நிர்வாகிகள் தங்கவேல், அஜய்மூர்த்தி, அங்குராஜ், தனபால் உள்பட 100 பேர் பங்கேற்றனர்.

Related posts

பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்

மது அருந்த பணம் தராததால் தற்கொலை

கல்லூரி விடுதியில் மாணவி மாயம்