பல்கலை. துணைவேந்தர்களுடன் முதல்வர் 30ம் தேதி ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் வரும் 30ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 17ம் தேதி ஆலோசனை மற்றும் ஆய்வுக்கூட்டம் நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த கூட்டம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்படும் என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது.  இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட தேதிக்கு முந்தைய நாள், டெல்லி பயணம் மேற்கொண்டார். இதனால் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் நடப்பதாக இருந்த கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஒத்திவைக்கப்பட்ட ஆலோசனைக் கூட்டம் வரும் 30ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.  ஏற்கனவே நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே கூட்டம் நடத்த திட்டமிடப்படுள்ளதாகவும், இக்கூட்டத்தில், உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துவது, தேர்ச்சி விகிதங்களை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது, ஆராய்ச்சிக்கான முன்னெடுப்புகளை அதிகரிப்பது என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கியமாக மாநில கல்வி கொள்கை தொடர்பாகவும் கருத்துகள் கேட்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்