பலாத்கார வழக்கை தொடர்ந்து கேரள காங். எம்எல்ஏ மீது கொலை முயற்சி வழக்கு: ஆசிரியை வீட்டில் எம்எல்ஏ உடைகள் கண்டெடுப்பு

திருவனந்தபுரம்: பள்ளி ஆசிரியையை பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஒரு வாரத்திற்கு மேலாக தலைமறைவாக உள்ள கேரள காங்கிரஸ் எம்எல்ஏ எல்தோஸ் மீது திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசார் கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்து உள்ளனர். கேரள மாநிலம் பெரும்பாவூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவர் எல்தோஸ். அவர் மீது கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியை கோவளம் போலீசில் பலாத்கார புகார் செய்தார். தொடர்ந்து ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, அவர் தலைமறைவாகிவிட்டார். ஆசிரியையிடம் குற்றப்பிரிவு போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாரணை நடத்தினர். அப்போது  கோவளத்தில் வைத்து எம்எல்ஏ எல்தோஸ் தன்னை கடலில் தள்ளி கொலை செய்ய  முயற்சித்ததாக அவர் கூறினார். இதைத்தொடர்ந்து அவர் மீது தற்போது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையே பலாத்கார புகார் கொடுத்த பள்ளி ஆசிரியையின் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்திய போது அந்த  வீட்டிலிருந்து எம்எல்ஏ எல்தோசின் உடைகள் மற்றும் மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன….

Related posts

தேர்வு எழுதும் மாணவர்களுடனான மோடியின் கலந்துரையாடல் மெய்நிகர் நிகழ்ச்சியாகிறது: நீட் விவகாரத்தால் மாற்றம்

மாநில கட்சிகளை அழிக்கும் பாஜதான் ஒரு ஒட்டுண்ணி: மோடிக்கு காங்கிரஸ் பதிலடி

புதிய பாடத்திட்டத்தின் கீழ் 6ம் வகுப்பு புத்தகம் தயாரிப்பு பணி இன்னும் முடியவில்லை: கல்வி அமைச்சகம் தகவல்