பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

மேட்டூர், அக்.9:வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து மேட்டூரில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மேட்டூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் தலைமை வகித்தார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து துறைகள் சார்பில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். உள்ளாட்சி துறையும் மின்வாரியமும் இணைந்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை காலங்களில் ரோந்து பணியை ஈடுபட வேண்டும். மழைநீர் தேங்காதவாறு சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என சதாசிவம் எம்எல்ஏ ஆலோசனை வழங்கினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேட்டூர் துணை தாசில்தார் தமிழ்செல்வி, மின்வாரிய செயற்பொறியாளர் ரவி, மேட்டூர் இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி, மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் சுமித்ராபாய் மற்றும் வனத்துறை, கல்வித்துறை, பேரூராட்சி செயல் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Related posts

கல்லூரிகளுக்கு இடையே கபடி போட்டி

கணவரின் உடலை மறு போஸ்ட்மார்டம் கோரிய மனு தள்ளுபடி

திருச்சி அருகே சோகம் வெளிநாடு செல்ல இருந்தவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு