பரமக்குடி அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்

பரமக்குடி, ஜூன் 14: அரசு கலை கல்லூரிகளில் 2024-25ம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை கடந்த மே மாதம் 24ம் தேதி சிறப்பு ஒதுக்கீட்டு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது. இதனை தொடர்ந்து, ஜூன் 10ம் தேதி முதல் பொதுப் பிரிவினருக்கு அரசு இடஒதுக்கீடு அடிப்படையில் அனைத்து அறிவியல் (பிஎஸ்சி) பட்டப் படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கையும், ஜூன் 11ம் தேதி வணிகவியல், தொழில் நிர்வாகவியல் படிப்புகளுக்கும், 12ம் தேதி வரலாறு பொருளியல் துறைகளுக்கும், நேற்று, தமிழ்,ஆங்கிலம் மொழிப் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெற்றது.

மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் துறை தலைவர்கள் அறிவழகன், கோவிந்தன், ரேணுகாதேவி, கண்காணிப்பாளர் ரகுபதி உள்ளிட்ட பேராசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் பொறுப்பு சிவக்குமார் கூறுகையில், பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகளுக்கான முதல் கலந்தாய்வு நடைபெற்றுள்ளது. மேலும் பாடப்பிரிவுகளில் உள்ள காலியிடங்களுக்கு இரண்டாவது கலந்தாய்வு வரும் 24ம் தேதி நடைபெறும். முதல் கலந்தாய்வில் இடம் கிடைக்காத மாணவர்கள் இரண்டாவது கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை