பரமக்குடி அரசு கல்லூரியில் ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி

பரமக்குடி, ஜன.6: பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் ராமநாதபுரம் மாவட்ட அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி வழங்கப்பட்டது.  தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் மற்றும் பரமக்குடி அரசு கலைக்கல்லூரியும் இணைந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி துவங்கியது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி முகாமிற்கு பரமக்குடி அரசு கல்லூரி முதல்வர் மேகலா தலைமை தாங்கினார். முன்னதாக பயிற்சி ஒருங்கிணைப்பாளர் கணிதத் துறை தலைவர் அறிவழகன் வரவேற்றார்.

பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர் முருகம்மாள் பயிற்சியினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். கமுதி வட்டார கல்வி அலுவலர் சண்முகம், வரலாற்று துறை தலைவர் கணேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்லூரியின் துறைத் தலைவர்கள் ஆஷா, ரேணுகா தேவி, கண்ணன், மும்தாஜ் பேகம், தினேஷ் பாபு, விஜயகுமார், ரமேஷ், மோகன கிருஷ்ணவேணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்த பணியிடை பயிற்சியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் 52 பேர் கலந்து கொண்டனர். இறுதியில் இயற்பியல் துறை தலைவர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை