பயிறு வகை பயிர்களில் சான்று விதையின் பயன்கள் தொழில்நுட்ப பயிற்சி

 

குளித்தலை, ஜூலை 24: கரூர் மாவட்டம் நங்கவரம் கிராமத்தில் பயிறு வகை பயிர்களில் சான்று விதையின் பயன்கள் விதை நேர்த்தி மற்றும் அதிக உற்பத்திக்கான தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது. பயிற்சியில் வேளாண்மை துறையின் திட்டங்கள் குறித்து துணை வேளாண்மை அலுவலர் கணேசன் பேசினார்.

வேளாண் அறிவியல் மையத்திலிருந்து கலந்து கொண்ட தமிழ்ச்செல்வன் சான்று விதையின் பயன்கள் விதை நேர்த்தி அதிக உற்பத்திக்கான தொழில்நுட்பங்கள் பற்றி விவசாயிகளிடையே பேசினார். உதவி வேளாண்மை அலுவலர் தனபால். பாரத பிரதமர் கிஷான் மற்றும் மானியத்துடன் கிடைக்கும் இடுபொருள்கள் குறித்து பேசினார். அட்மா திட்ட அலுவலர் செல்வந்திரன் நன்றி கூறினார். பயிற்சியில் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி