பந்தலூர் வட்டத்தில் இன்று உங்களை தேடி, உங்கள் ஊாில் முகாம்

 

ஊட்டி, ஜூலை 24: பந்தலூர் வட்டத்தில் இன்று (24ம் தேதி) மாவட்ட கலெக்டர் தலைமையில் ‘உங்களை தேடி, உங்கள் ஊாில் திட்ட முகாம் நடக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் என்ற அடிப்படையில் உங்களை தேடி, உங்கள் ஊரில் என்ற திட்டத்தினை அறிவித்துள்ளார்.

அதன்படி கலெக்டர் மற்றும் அனைத்து மாவட்ட உயர்நிலை அலுவலர்கள், ஒவ்வொரு மாதமும் ஒரு வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சேவைகளும், தங்கு தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் இன்று (24ம் தேதி) காலை 9 மணியளவில் உங்களை தேடி, உங்கள் ஊரில் என்ற திட்டமானது பந்தலூர் வட்டத்தில் நடைபெறும். இதில் கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு மற்றும் அனைத்து அலுவலர்களும் பங்கேற்று வருவாய் கிராமங்கள் வாரியாக கள ஆய்வு செய்ய உள்ளனர்.

அரசு அலுவலகங்களையும் ஆய்வு செய்ய உள்ளனர். இந்த ஆய்வின் போது சந்திக்கும் மக்களிடம் குறைகளையும் கேட்கின்றனர். அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சேவைகளும், தங்கு தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்து நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர். இதில் பொதுமக்கள் தங்கள் குறைகளுக்கான மனுக்களை உரிய அலுவலர்களிடம் நேரில் அளிக்கலாம். மேலும் பிற்பகலில் பந்தலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து அளித்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி