பத்திரகாளியம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா

 

ஆர்.எஸ்.மங்கலம், செப்.11: ஆர்.எஸ்.மங்கலம் அருகே மேலச்செங்குடி கிராமத்தில் பத்திரகாளியம்மன், கருப்பண சுவாமி ஆலயத்தின் கும்பாபிஷேக விழா கடந்த ஆண்டு நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து நேற்று வருடாபிஷேக விழா நடைபெற்றது. விழாவில் முன்னதாக கணபதி பூஜை, விக்னேஸ்வரர் வழிபாடு நடைபெற்று, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனிதநீர் மூலவர்களுக்கு ஊற்றப்பட்டு வருடாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மூலவர்களுக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

தொடர்ந்து உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும், 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது. அபிஷேகம் செய்யப்பட்ட 108 சங்குகளில் உள்ள புனித நீர் மூலவர்களுக்கு ஊற்றப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் மேலச்சங்குடி, வாணியக்குடி, கடலூர், வெட்டுக்குளம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதி கிராம குலதெய்வ வழிபாட்டு மன்றத்தினரும், கிராம பொதுமக்களும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை