பதுக்கி வைத்திருந்த 300 மதுபாட்டில் பறிமுதல்: 2 பெண்கள் கைது

பெரம்பூர்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நாளை முதல் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்க சிலர் பதுக்கி வைக்கதொடங்கியுள்ளனர். இந்நிலையில், வியாசர்பாடி சஞ்சய்நகர் பகுதியில் எம்கேபி நகர் காவல்நிலைய சப்இன்ஸ்பெக்டர் கல்வியரசன் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். ஒரு வீட்டில் பெட்டி பெட்டியாக மதுபானம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 300 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த செல்வி (43) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதுபோல் எம்கேபி நகர் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், எம்கேபி நகர் போலீசார் அங்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுபானம் விற்றுகொண்டிருந்த பெண்ணை மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வியாசர்பாடி கக்கன்ஜி காலனி பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரி (54) என்பது தெரியவந்தது. இவரிடம் இருந்து 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 2 பெண்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

Related posts

வெளிநாடுகளுக்கு போலி தங்கம் அனுப்பி ரூ.1,000 கோடி மோசடி

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் மோசடி: அதிமுக முன்னாள் சபாநாயகர் சகோதரர் கைது

தீரன் அதிகாரம் பட பாணியில், ஹரியானா சென்று கொள்ளையனை துப்பாக்கி முனையில் கைது செய்த தமிழக போலீஸ்!!