பண்ருட்டியில் வீடு புகுந்துகொள்ளையடித்த 3 பேர் அதிரடி கைது

 

பண்ருட்டி, நவ. 6: பண்ருட்டி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பகல் நேரத்தில் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து இரண்டு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் சேர்ந்து தங்க நகைகளை திருடி சென்றது சம்பந்தமாக பண்ருட்டி நகர காவல் நிலையதில் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வந்தனர்.

இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்கும் பொருட்டு கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம் உத்தரவின்பேரில் பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லா மேற்பார்வையில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கவேல், பிரசன்னா ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப் பட்டு சிசிடிவி பதிவுகள் மற்றும் சைபர் க்ரைம் தலைமை காவலர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டதில் மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகில் உள்ள பொத்தேரி சிறுவாச்சூர் என்ற ஊரைச் சேர்ந்த சக்திவேல், வேளாங்கண்ணி, நதியா ஆகியோர் என தெரிய வந்தது.

இதை தொடர்ந்து வேறொரு கொள்ளை வழக்கில் சிதம்பரத்தில் கைதாகி, கடலூர் மத்திய சிறையில் இருந்த இவர்கள் 3 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதில், பண்ருட்டியில் வக்கீல் வீட்டில் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.5 லட்சம் பணம் கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டனர். தலைவராக உள்ள இவர்களது கூட்டாளி ஒருவனிடம் பணம் உள்ளது என ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். பணத்துடன் தலைமறைவாகியுள்ள கூட்டாளியை தேடி வருகின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை