பண்டிதகாரன்புதூரில் 21ம் தேதி ஆடு வளர்ப்பு இலவச பயிற்சி முகாம் பயிற்சியில் பங்கு பெற அழைப்பு

வேலாயுதம்பாளையம், ஏப்.19: வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு குறித்த இலவசப் பயிற்சி முகாம் பண்டிதகாரன்புதூர் கால்நடை பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.
கரூர் மாவட்டம் மணமங்கலம் அருகே பண்டுதகாரன்புதூரில் உள்ள கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் வரும் 21ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுகிறது.

இப்பயிற்சியில் ஆடுகளை தேர்வு செய்தல், தீவன பராமரிப்பு, ஆடுகளைத் தாக்கும் நோய்கள் மற்றும் அவற்றைத் தடுக்கும் முறைகள் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் நேரடியாக வரும் 21ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்குள் வந்து பயிற்சியில் பங்குகொள்ளுமாறு மையத்தின் தலைவர் முனைவர் அருணாசலம் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தகவலுக்கு அலுவலக தொலைபேசி எண்கள் 04324 294335 மற்றும் 7339057073 மூலம் தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை