பணம் பட்டுவாடாவுக்கு பட்டியல் தயார்

தமிழக சட்டமன்ற ேதர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. திமுக, அதிமுக கட்சிகள் வேட்பாளர்கள் அறிவித்த நிலையில், தேசிய கட்சிகள் 12ம் தேதியான நேற்று மாலை வரை அறிவிக்கவில்லை. வேட்பாளர் அறிவித்த பின்னர்,  வேட்பு மனு தாக்கல், பிரசாரம் என ெமாத்தம் 20 நாட்கள் வரையே மேற்கொள்ள முடியும்.  குறைவான நாட்களே உள்ளதால், பிரசாரம் செல்வதற்கு பதில் பூத் கமிட்டி மற்றும் இதர பணிகளில் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே குமரியில் ஆளும் கட்சி போட்டியிடும் தொகுதியில், வேட்பாளர் தனது பெயரை கடந்த வாரமே உறுதி ெசய்து கடைசியாக விருப்ப மனு தந்து விட்டு தேர்தல் பணியை தொடங்கி விட்டாராம். இதற்காக தனியாக ஊழியர்களை நியமனம் செய்துள்ளனர்.  இதன்படி இரு கம்யூட்டர்களில் பணம் வழங்க வேண்டியவர்கள் பற்றிய பட்டியல், சுய உதவிக் குழுக்கள் குறித்த பட்டியல் தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்ற வருகிறது. இதுபோல், மதகுருக்கள், ஜாதி அமைப்பு பிரதிநிதிகள், சொந்த கட்சி அதிருப்தியாளர்களையும், விலை உயர்ந்த பரிசுகள், கரன்சி மழையில் குளிர்விக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம். தாமரை கட்சியிலும், பொன்னார் இம்முறை, எதிரணியை குழப்ப மாற்று மதங்களை சேர்ந்த வேட்பாளர்களை தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது….

Related posts

அரியானா சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும் என அறிப்பு

அரசு மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளை களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சொல்லிட்டாங்க…