பணகுடி பேரூராட்சி பகுதியில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர் பணகுடி,அக்.10: பணகுடி

பேரூராட்சி பகுதியில் மர்மநபர்கள் உடைத்து சென்றதால் குழாயில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறி செல்கிறது. இதுகுறித்து தெரியவந்ததும் இவ்வாறு பணகுடி பேரூராட்சிப் பகுதியில் குடிநீர் குழாயை உடைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலர் உமா போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:பணகுடி பேருராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமான வாழைத்தோப்பு திறந்தவெளி கிணற்றிலிருந்து அழகியநம்பிபுரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு செல்லும் பிரதான குடிநீர் குழாயை மர்ம நபர்களால் சேதப்படுத்தி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இவ்வாறு குடிநீர் குழாயை உடைத்த சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்