பட்டுக்கோட்டை அருகே நெம்மேலியில் 108 பசுக்களுக்கு கோ பூஜை-உலக நன்மை வேண்டி நடந்தது

பட்டுக்கோட்டை : பட்டுக்கோட்டை அருகே நெம்மேலியில் உலக நன்மை வேண்டி 108 பசுக்களுக்கு கோபூஜை நடைபெற்றது.தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த 28 நெம்மேலி கிராமத்தில் கிராம மக்கள் சார்பில் கோ பூஜை விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் 22ம் ஆண்டு கோபூஜை விழா அதே கிராமத்தில் உள்ள உண்ணாமுலை தாயார் உடனுறை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நடந்தது. உலக நன்மை வேண்டி நடந்த இந்த கோ பூஜை விழாவில் நெம்மேலி மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 108 பசுக்கள் கலந்து கொண்டது. முதலில் கோ பூஜை விழாவில் கலந்து கொள்ள வந்த பசுக்களுக்கு சந்தனம், குங்குமம் இட்டு, கொம்பில் துணி கட்டி, மாலை அணிவித்து வரவேற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒரே இடத்தில் 108 பசுக்களையும் வைத்து கோ பூஜை விழா நடத்தப்பட்டது. அனைத்து பசுக்களுக்கும் வேஷ்டி, துண்டு, சேலை போர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட அனைத்து பசுக்களுக்கும் பட்டுக்கோட்டை நந்தீஸ்வரர்சுப்ரமணியன் நினைவு பரிசு வழங்கினார். விழாவில் நல்வழிக்கொல்லை சித்தர், சின்ன ஆவுடையார் கோயில் அகோரி சித்தர், சிவத்தொண்டர்கள் மலையப்பன், குருசாமி, ராஜகோபால்,சூரைசண்முகம், முருகேசன், வெங்கடேசன், சன்சிவா மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் கோ பூஜை விழாவை கண்டு, அருணாச்சலேஸ்வரரை வழிபட்டுச் சென்றனர்….

Related posts

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நாளை போக்குவரத்து மாற்றம் மற்றும் பார்க்கிங் ஏற்பாடு: சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு