படைபத்து மாரியம்மன் கோயிலில் பால்குட திருவிழா

 

அரியலூர், ஜூலை 22: அரியலூர் மேலத்தெருவில் உள்ள படைபத்து மாரியம்மன் கோயிலில், ஆடி முதல் வெள்ளியையொட்டி பால்குட திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி, அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள செட்டி ஏரி விநாயகர் கோயிலிலிருந்து பால்குடம், அக்னி சட்டி எடுத்த வந்த பக்தர்கள், முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து கோயிலை அடைந்தனர். அங்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலைக் கொண்டு வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து