படுதார்கொல்லை சிற்றேரியில் மணல் அள்ளப்படுவதை கண்டித்து போஸ்டர்: காரைக்காலில் பரபரப்பு

 

காரைக்கால்,பிப்.10: காரைக்கால் அடுத்த திருமலைராயன் பட்டினத்தில் படுதார்கொல்லை சிற்றேரி உள்ளது. இங்கு அரசால் அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலான ஆழம் தோண்டி படுதார்கொல்லை சிற்றேரியில் மணல் அள்ளப்படுவதாக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்றது. மேலும் படுதார்கொல்லை சிற்றேரியில் மணல் அள்ளப்படுவது எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காரைக்கால் மாவட்டம் முழுவதும் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் பகுதி வாழ் மக்களுக்கு நல்ல குடிநீர் வழங்குதற்கும் வறட்சி காலத்தில் விளை நிலங்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கும் உருவாக்கப்பட்ட மேற்படி சிற்றேரியின் நோக்கங்களை புதுச்சேரி அரசே! சீர் குலைக்காதே! எனவும்,மேற்கொண்டு மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்காதே!

சிற்றேரியினை உப்புநீர் ஏரியாக மாற்றாதே! திருப்பட்டினத்தை பாலைவனமாக ஆக்காதே! பகுதிவாழ்மக்களை வாழவிடு!திருமலைராயன்பட்டினம், படுதார்கொல்லை சிற்றேரியினை வட்டமிட்டுவரும் மணல் மாஃபியாக்கள்! என குறிப்பிடப்பட்டுள்ளது. படுதார்கொல்லை சிற்றேரியில் மணல் அள்ளப்படுவதை கண்டித்து காரைக்காலில் போஸ்டர் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து