பசுமை தினம் கொண்டாட்டம்

 

ராமநாதபுரம், செப்.25: ராமநாதபுரத்தில் தமிழ்நாடு பசுமை தினத்தை முன்னிட்டு மரம் வளர்ப்பதின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழ்நாடு அரசு சார்பில் பசுமை தினங்கள் கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரத்தில் வனத்துறை மற்றும் பள்ளிகளில் உள்ள பசுமைப் படை, சுற்றுச்சூழல் மன்றங்கள், என்.எஸ்.எஸ் உள்ளிட்டவற்றின் மூலம் மாணவர்களை ஒருங்கிணைத்து பசுமை தினம் கொண்டாடப்பட்டது.

இதில் சுற்றுசூழல் குறித்த விழிப்புணர்வு, வனங்களை பாதுகாத்தல், புவி வெப்பமடைதலை குறைத்தல், மரம் வளர்த்தல், மரம் வெட்டுவதை தடுத்தல் குறித்து பேசப்பட்டது. தொடர்ந்து ராமநாதபுரம் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. பேரணியை மாவட்ட வன அலுவலர் ஹேமலதா கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்று ராமநாதபுரம் அரசு கலைக் கல்லூரியில் நிறைவடைந்தது. இதில் மாவட்ட வனத்துறை அலுவலர்கள், வனக்காப்பாளர்கள், ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை