பசுமைக் குடில் – ரூ.25 லட்சம் மானியம்…காய்கறிகள் – ரூ.30 லட்சம் மானியம்

விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாறிக்கொண்டேவருகிறது. பல்வேறு தொழிற்சாலைகள் துவங்க மட்டுமே பலர் முன் வருவதால் விவசாய விளைநிலங்கள் அழிவை நோக்கி செல்கின்றது. இன்னொரு புறம் மக்கள் தொகை பெருக்கம். உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. பாரம்பரிய விவசாயத்திலும் இயற்கை முறை வேளாண்மையிலும் பெரும்பான்மையான விவசாயிகளுக்கு எதிர்பார்த்தளவு வருமானம் கிடைக்கவில்லை. கிராமங்களில்  70 சதவீத மக்கள் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. விவசாயத்தில் ஆட்கள் பற்றாக்குறை, கூலி சிக்கல் மற்றும் பருவத்திற்கு பயிர் செய்ய இயலாமை போன்ற பிரச்னைகளை சந்தித்து வருகின்றார்கள். இஸ்ரேல் போன்ற நாடுகளில் கடைப்பிடித்து வரும் உயர் தொழில் நுட்ப வேளாண்மை முறை, நவீன எந்திரங்கள், குறைந்த இடம் மற்றும் குறைந்த ஆட்களை கொண்டு அதிக விளைச்சல் பெற்று நல்ல வருவாயை அடையலாம். இந்த உயர்தொழில் நுட்ப வேளாண்மை முறையில், பசுமைக்குடில்கள், நிழல்குடில்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட நில, அமைப்புகளை கொண்டு நாமும் விவசாயம் செய்யலாம்.* பசுமைக் குடில்கள் அனைத்து தட்ப வெப்ப நிலைகளுக்கும் ஏற்றது. பாரம்பரிய விவசாய முறையை ஒப்பிடும்போது 10 மடங்கு விளைச்சல் அதிகம். நோய் தாக்கம் மிகக்குறைவு. பாதுகாக்கப்பட்ட வேளாண்மை, குறைந்த தண்ணீர் மற்றும் உரம் போதுமானது. வேலையாட்கள் குறைவு. 10 முதல் 15 வருடங்கள் வரை நீடித்து உழைக்கும். இக்குடில் மூலம் தக்காளி, கத்தரி, வெண்டை உள்ளிட்ட எல்லா வகையான காய்கறி வகைகள், ரோஜா, மல்லி போன்ற மலர் வகைகளுக்கு உகந்தது.பசுமைக்குடில் அமைக்க தேசிய தோட்டக்கலை வாரியத்தின் மூலம் ஏக்கருக்கு காய்கறி பயிர்களுக்கு ₹25 லட்சமும் மலர் வகைகளுக்கும் ₹30 லட்ச மானியமும் தருகின்றார்கள். * பசுமைக் குடில்களை போல நிழல் குடில்களும் எல்லா சீதோஷ்ண நிலையையும் சமாளித்து இருக்கும். பாரம்பரிய விவசாய முறையை ஒப்பிடும்போது 4-8 மடங்கு விளைச்சல் அதிகம். அமைக்கும் செலவும் குறைவு. 4 முதல் 6 வருடங்கள் வரை நீடித்து உழைக்கும். எல்லா வகையான காய்கறி வகைகளுக்கும் உகந்தது. இதற்கு ஏக்கருக்கு ரூ.20 லட்சம் வரை மானியம் கிடைக்கும்.* திறந்த வெளி விவசாயத்தில் மேம்படுத்தப்பட்ட நில அமைப்புகளை கொண்ட மா, தென்னை, வாழை, புளி, பப்பாளி, எலுமிச்சை, சப்போட்டா, திராட்சை போன்ற பணப்பயிர்களை குறைந்தது 5 ஏக்கர் சாகுபடி செய்யலாம். இதில் விவசாய நிலத்தை மேம்படுத்த, வேலி அமைக்க, ஆழ்துளை கிணறு மற்றும் சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம் கிடைக்கிறது. மேலும், தேசிய தோட்டக்கலை வாரியத்தின் மூலம் ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் வரை மானியம் கிடைக்கும்.* விவசாயத் தொழில் மூலம் உற்பத்தியான காய்கறிகள், பழவகைகள் எளிதில் அழுகி வீணாகிவிடுகின்றன. இதனை தடுக்க குளிர்பதனக் கிடங்கு அமைத்து அதில் வைத்து பாதுக்காக்கலாம். இந்த குளிர்பதனக் கிடங்கு அமைக்க 35 சதவீதம் மானியம் கிடைக்கும். இந்த வேளாண் முறைகள் அனைத்திற்கும் தேசிய தோட்டக்கலை வாரியத்தின் மூலம் மானியம் பெற இந்திய தோட்டக்கலை மற்றும் உணவு பதனிடுதல் சேவை மையம் உதவுகிறது. தவிர, பசுமைக் குடில்கள், நிழல் குடில்களை அமைத்து தருகின்றனர். திசு கல்சர், ஆய்வுக் கூடம், குளிர்பதனக் கிடங்குகளில் கட்டுமானம், விரிவாக்கம், நவீன மயமாக்குதல் ஆகியவற்றுக்கு மானியத்துடன் கூடிய முதலீட்டுக் கடன் பெற்றுத் தர ஏற்பாடு செய்கின்றனர். மேலும், விவசாயிகளுக்கு திட்ட அறிக்கை உருவாக்குதல், விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தல், தேவையான பத்திரங்கள் பெற உதவி செய்கின்றார்கள், பின் ஆய்வுக்கான ஏற்பாடு, மானியத்திற்கு விண்ணப்பிக்க உதவுதல், மானியம் பெற்று தருதல், திட்டத்தை செயல்படுத்த தொழில்நுட்ப ஆலோசனை வழங்குவது, கூடவே சாகுபடி செய்த வேளாண் பொருட்களை விற்பனை செய்ய தேவையான அனைத்து உதவிகளையும் செய்கின்றார்கள். இந்திய தோட்டக்கலை மற்றும் உணவு பதனிடுதல் சேவை மையம்,  கெலமங்கலம் மெயின் ரோட், குருபட்டி கிராமம், ஓசூர்,தொடர்பு எண் 04344-221648, 94877-28648, 90430-20648.அட்டைப் படம் : கே.ஜெகன்தொகுப்பு: எம். சதீஷ்குமார்  படங்கள்: சி.கார்த்தீஸ்வரன்

Related posts

ஆப்பிள், காபி, அவகோடா… அரியலூரில் அம்சமாக விளையுது!

வேளாண் சுற்றுலா மையமான தரிசு நிலம்!

குழியடிச்சான்