பங்குனி பௌர்ணமி: சதுரகிரி கோயிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி

வத்திராயிருப்பு: பங்குனி பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரலிங்கம் மலைக்கோயிலுக்கு செல்ல, நாளை முதல் மார்ச் 18ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் உள்ளது. அமாவாசை, பௌர்ணமிக்கு தலா மூன்று நாட்கள், பிரதோஷத்திற்கு ஒரு நாள் என மாதத்திற்கு எட்டு நாட்கள் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், பிரதோஷம் மற்றும் பங்குனி பௌர்ணமியை முன்னிட்டு, நாளை (மார்ச் 15) முதல் மார்ச் 18ம் தேதி வரை 4 நாட்களுக்கு காலை 7 மணி முதல் 11 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.நாளை மாலை பிரதோஷத்தையொட்டி 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகம் நடைபெறுகிறது. அதன்பின் சுவாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. வருகிற 17ம் தேதி பங்குனி பௌர்ணமியையொட்டி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. நாளை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கோயிலுக்கு 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 60 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கு அனுமதி இல்லை….

Related posts

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற உள்ள போர் விமான சாகச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைச்சர் எ.வ.வேலு களஆய்வு மேற்கொண்டார்!

பார்வையாளர்களுக்கு பிரத்யேக ஏற்பாடுகள்; சிறையில் செந்தில் பாலாஜிக்கு சிறப்பு வசதிகள் தரப்படவில்லை: அமைச்சர் ரகுபதி பேட்டி

சவூதியின் ஜெட்டா நகருக்கு வாரத்தில் 2 நாள் நேரடி விமான சேவை: சென்னையில் நேற்று துவங்கியது