நேபாள விமான விபத்தில் 14 உடல்கள் கண்டெடுப்பு; கதறும் குடும்பத்தினர்…மீட்பு பணிகள் தீவிரம்..!!

நேபாள நாட்டின் பொதுத்துறை நிறுவனமான “தாரா ஏர்லைன்ஸ்”-க்கு சொந்தமான சிறிய ரக பயணிகள் விமானம் 4 இந்தியர்கள், 2 ஜெர்மனியர்கள், 16 நேபாளிகள் மற்றும் 3 விமான பணியாளர்களுடன் நேபால் தலைநகர் காத்மண்டுவிற்கு மேற்கே 180 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொக்காரவிலிருந்து வட மேற்கே 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜோன்சோம் நோக்கி சென்றது. நேபாளத்தின் முஸ்டாங் மாவட்ட மலைத் தொடர் அருகே விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணித்த 22 பேரும் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. இதுவரை 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. அவர்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்படுகிறது. சிலரின் உடல் அடையாளம் காண முடியாத அளவிற்கு மோசமாக சிதைந்துள்ளது. மீதமுள்ளவர்களை தேடும் பணியில் ராணுவம் ஈடுபட்டு வருகிறது.

Related posts

பிரபஞ்ச அழகிப்போட்டி: 80 வயது மூதாட்டி சோப் சூன் பங்கேற்பு!!

அமெரிக்காவை ஹெலன் சூறாவளி புயல் : பலி எண்ணிக்கை 120 ஆக உயர்வு!!

சீன மக்கள் குடியரசின் 75-வது ஆண்டு விழா கொண்டாட்டங்கள்..!!