நெல்லியாளம் நகராட்சியில் செப்டிக் டேங் வாகனங்கள் உரிமம் பெற்றுகொள்ளலாம்

பந்தலூர், ஏப்.30: நெல்லியாளம் நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பிரான்சிஸ் சேவியர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நெல்லியாளம் நகராட்சி பகுதியில் கழிவுநீர் தொட்டி (செப்டிங் டேங்) சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் வாகனங்கள் உரிய ஆவணங்களுடன் நகராட்சியில் ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தி உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும். உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் நகராட்சி பகுதியில் கழிவுநீர் அகற்றும் பணியில் வாகனங்கள் ஈடுபட்டால் அந்த வாகனங்கள் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் பறிமுதல் செய்வதுடன் வழக்குபதிந்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.  இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related posts

தூத்துக்குடியில் புரோட்டா மாஸ்டர் மாயம்\

வியாபாரியை மிரட்டியவருக்கு வலை

தூத்துக்குடி விமான நிலையத்தில் ஒன்றிய அமைச்சருக்கு பாஜவினர் வரவேற்பு