நெமிலி அருகே ஏரி கால்வாயில் இறந்த கோழிகள் கொட்டியதால் நோய் தொற்று அபாயம்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

நெமிலி: நெமிலி அருகே ஏரிக்கு தண்ணீர் செல்லும் கால்வாயில் இறந்த கோழிகளை கொட்டியதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சுகாதாரத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெமிலி அடுத்த கீழ் வெண்பாக்கம் ஏரியிலிருந்து திருமால்பூர் வழியாக அகரம் ஏரிக்குச் செல்லும் கால்வாயில் நோயால் இறந்துபோன கோழிகள் மற்றும் கோழி கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டியுள்ளனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதாகவும் ஈக்கள், கொசுக்கள் பெருகி நோய்கள் பரவும் அபாயம் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். உடனடியாக சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கால்வாயில் இறந்துபோன கோழிகளை கொட்டி சென்றவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதுடன் கால்வாயில் போட்டுள்ள இறந்து துர்நாற்றம் வீசும் கோழிகளை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

3 புதிய குற்றவியல் சட்டங்கள்.. எதற்காக இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன?: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி

கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு..!!

சாத்தான்குளம் கொலை வழக்கு: காவலர் தாமஸுக்கு ஜாமின் வழங்கியது ஐகோர்ட் கிளை