நெமிலிச்சேரி ஊராட்சியில் ரூ.53 லட்சத்தில் திட்டப்பணிகள்: அமைச்சர் நாசர் துவக்கி வைத்தார்

ஆவடி: ஆவடி தொகுதி நெமிலிச்சேரி ஊராட்சியில் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, நாகத்தம்மன் தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சுத்தரிக்கப்பட்ட குடிநீர் நிலையம், இருளர்பாளையம் பகுதியில் ரூ.5.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுகாதார கழிப்பிட கட்டிடம் ஆகியவற்றின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்துகொண்டு திறந்து வைத்தார். இதில் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் டி.தேசிங்கு, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் கே.ஜெ.ரமேஷ், ம.ராஜி, ஒன்றியக்குழு துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன், ஊராட்சி தலைவர் கு.தமிழ்ச்செல்வி, ஒன்றிய கவுன்சிலர் கே.சுரேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜி.பாலசுப்பிரமணியம், பொற்செல்வி, துணை தலைவர் வாசுகி எட்வின், திமுக ஒன்றிய நிர்வாகிகள் இ.கந்தபாபு, சுமதி விஜயகுமார், கு.ச.கதிரவன், கட்டதொட்டி எம்.குணசேகரன், பா.கந்தன், ஜிசிசி.கருணாநிதி, பிரதீப், ஆர்.செந்தாமரை, சாக்ரடீஸ், பரணிதரன், பிரவீன்குமார், ராஜேஷ் சர்மன்ராஜ், சுகுமார், கிளை செயலாளர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்….

Related posts

அரசியல் ஆதாயத்துக்காக கொலை நடந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை: கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் பேட்டி

சைக்கிளில் சென்று மக்களிடம் குறைகளை கேட்ட திமுக எம்பி

அரசு மரியாதை வழங்கக் கோரிய விண்ணப்பம் மீது அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம்: நீதிபதி!