நெட்டப்பாக்கத்தில் வழிப்பறி வழக்கில் தேடப்பட்ட மேலும் 3 ரவுடிகள் கைது

திருபுவனை, செப். 4: நெட்டப்பாக்கத்தில் வழப்பறி கொள்ைள வழக்கில் தேடப்பட்ட மேலும் 3 ரவுடிகளை ஊசுட்டேரியில் போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் 5 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். புதுச்சேரி, நெட்டப்பாக்கம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் எஸ்ஐ வீரபுத்திரன் தலைமையிலான போலீசார் சில தினங்களுக்கு முன்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கரிய மாணிக்கம் சிவபெருமான் நகரில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த கொலை வழக்கு ரவுடிகளான சதிஷ்குமார், ஜான் டேனியல், சுதர்சன், தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 4 ரவுடிகளை மடக்கிப் பிடித்த போலீசார் அவர்களிடம் கத்தி, இரும்பு ராடு உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், அங்குள்ள தொழிற்சாலைகளுக்கு வந்து செல்லும் வடமாநில தொழிலதிபர்களை மிரட்டி வழிப்பறி செய்ய ஆயுதங்களுடன் பதுங்கியிருந்ததும், தப்பி ஓடியவர்களின் விபரமும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் சிறையில் அடைத்த போலீசார், தப்பி ஓடியவர்களை தீவிரமாக தேடி வந்தனர். நேற்று முன்தினம் அரியாங்குப்பத்தைச் சேர்ந்த ரத்தினம் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் நேற்று உசுட்டேரி பகுதியில் பதுங்கியிருந்த இருசம்பாளையம் சரவணன், அரியாங்குப்பம் சீனு மற்றும் ஜெயமூர்த்தி உள்ளிட்ட வர்களையும் மேற்கு பிரிவு கிரைம் போலீசார் உதவியுடன் நெட்டப்பாக்கம் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பிடிபட்டவர்களில் சரவணன் மீது விழுப்புரம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு மற்றும் கொலை வழக்கும் சீனு மற்றும் ஜெயமூர்த்தி மீது அரியாங்குப்பத்தில் கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் ெதரியவந்தது. மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள விஷ்வா, ஹேமநாதன், புஷ்பராஜ் உள்ளிட்ட 5 ரவுடிகளை தேடி வருகின்றனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி