நூதனமுறையில் 60,000 மோசடி: வாலிபர் கைது

திருவள்ளூர்: மணி டிரான்ஸ்பர் மூலம் 60 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த வாலிபரைபோலீசார் கைது செய்தனர்.பூந்தமல்லி அடுத்த திருமழிசை பகுதியில் சீனிவாசா செல் சர்வீஸ் கடை நடத்தி வருபவர் நமச்சிவாயம் (69). இவர் வெளிநாட்டு கரன்சி உள்பட பண பரிவர்த்தனை செய்து வருகின்றார். திருவள்ளூர் அருகே ஊத்துக்கோட்டையை சேர்ந்த கஜேந்திரன் என்பவரின் மகன் மோகன்பதி (25) 60 ஆயிரம் ரூபாய்  மணி டிரான்ஸ்பர் மூலம் அனுப்பிவைக்கும்படி கேட்டுள்ளார். இதையடுத்து நமச்சிவாயம், மோகன்பதி சொன்ன நபருக்கு ₹60 ஆயிரம் அனுப்பி உள்ளார்.இந்தநிலையில் 60 ஆயிரம் ரூபாய் டிரான்ஸ்பர் ஆனதும் நாளை தருகிறேன் என்று மோகன்பதி கூறியுள்ளார். இதுகுறித்து வெள்ளவேடு காவல் நிலையத்தில் நமச்சிவாயம் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மோகன்பதியை கைது செய்தார். பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி,  வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் மோகன்பதியை ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தார்….

Related posts

யூடியூப்பில் அவதூறு கருத்து கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் நகுல் புகார்

ஜாமீனில் எடுப்பதற்காக கொடுத்த ரூ.5 லட்சத்தை திருப்பி கேட்டு வக்கீலுக்கு கொலை மிரட்டல்: 6 பேர் கைது

2வது மனைவியை ஆள் வைத்து கடத்திய பாஜ வர்த்தகர் அணி தலைவர் உட்பட 9 பேர் மீது வழக்கு: பெண் நிர்வாகியுடன் தொடர்பில் இருப்பது அம்பலம்