நுணாக்காடு ஊராட்சியில் சுகாதார வளாகம் திறப்பு விழா

 

திருத்துறைப்பூண்டி, செப். 25: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் நுணாக்காடு ஊராட்சியில் சுமார் ரூ.6.50 லட்சம் செலவில் புதிதாக சுகாதார வளாகம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சின்னையன் தலைமை வகித்தார். சமுதாய சுகாதாரவளாக கட்டிடத்திற்கு நிலம் தானமாக வழங்கிய தென்பாதி பன்னை நாராயணசாமி பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார்கள். முன்னதாக கவிஞர் பொன்.இளையகுமார் வரவேற்றார்.

ஊராட்சி மன்ற துணைத்தலைவர் துரைராஜ், ஒன்றிய பொறியாளர் சாந்தி, ஊராட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகள் மேனகா, கோவிந்தராஜ், மைனாவதி, ஐயப்பன், சத்தியா, ஊராட்சி மன்ற செயலாளர் இளங்கோவன், வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், ஊராட்சி கணிணி இயக்குபவர் சதீஸ் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிறைவில் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஜெயந்தி நன்றி கூறினார்.

Related posts

தீவிர காய்ச்சலால் அவதி புதுவை அமைச்சர் நமச்சிவாயம் மருத்துவமனையில் திடீர் அனுமதி

கள்ளக்குறிச்சி மதி வழக்கு விசாரணை 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு நீதிபதி உத்தரவு

தூண்டில் வளைவு அமைக்கக்கோரி காலாப்பட்டு இசிஆரில் மீனவர்கள் திடீர் மறியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு