நீலகிரி வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 4 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா

கோத்தகிரி, செப்.17: கோத்தகிரியில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கொணவக்கரை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயப்பிரியா ஹரிஹரன் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 4 குடும்பங்களுக்கு தலா 1 1/4 சென்ட் வீதம் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. கோத்தகிரி அருகே கொணவக்கரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கொணவக்கரை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயப்பிரியா ஹரிஹரன் தலைமை வகித்தார்.விழாவில் சிறப்பு அழைப்பாளராக திமுக கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன், கோத்தகிரி ஒன்றிய பெருந்தலைவர் ராம்குமார் முன்னிலை வகித்து விழாவில் கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்வாக கொணவக்கரை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயப்பிரியா ஹரிஹரன், கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன், கோத்தகிரி ஒன்றிய பெருந்தலைவர் ராம்குமார் முன்னிலையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 4 குடும்பங்களுக்கு வீடு கட்டிக்கொள்ள 1 1/4 சென்ட் வீதம் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. விழாவில் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ராம்குமார், அவைத்தலைவர் கில்பர்ட், கணபதி, வார்டு உறுப்பினர் ரமேஷ், மீனா மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி