நீலகிரி மாவட்ட புதிய கலெக்டர் பொறுப்பேற்பு

ஊட்டி: நீலகிரி மாவட்ட கலெக்டராக 2017ம் ஆண்டு ஜூலை மாதம் இன்னசென்ட் திவ்யா பொறுப்பேற்றார். யானைகள் வழித்தட பிரச்னை தொடர்பான வழக்கில் கலெக்டரை இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் தடைவிதித்து இருந்தது. இதனால் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் நீலகிரி கலெக்டராக பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் நிர்வாக காரணமாக இவரை பணிமாற்றம் செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழகஅரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதை, ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், கலெக்டரை இடமாற்றம் செய்ய அனுமதி வழங்கியது.இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தின் புதிய கலெக்டராக நகராட்சிகளின் இயக்குநராக பதவி வகித்து வந்த அம்ரித்தை தமிழகஅரசு நியமித்து உத்தரவிட்டது. புதிதாக நியமிக்கப்பட்ட அம்ரித், இன்று நீலகிரி மாவட்ட கலெக்டராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, அனைத்து துறைகளின் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்….

Related posts

உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது லாரி மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 11.8 கி.மீ தூர மேற்கு புறவழிச்சாலை பணி ஜனவரியில் முடியும்

யோக கலைகளின் முன்னோடி யானை: பாகன் விளக்கம்