நீலகிரியில் புதிதாக உருவாகிய நீர்வீழ்ச்சிகள்

 

ஊட்டி, நவ.24: தொடர் மழை காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் பல்வேறு இடங்களிலும் புதிதாக நீர்வீழ்ச்சிகள் ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் துவங்கிய நவம்பர் மாதம் முடியும் வரை வடகிழக்கு பருவ மழை பெய்யும். இச்சமயங்களில் குன்னூர், கோத்தகிரி மற்றும் மஞ்சூர் போன்ற பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக காணப்படும். இதனால் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பாதிப்புகள் சற்று அதிகமாக காணப்படும். அதேபோல் குன்னூர் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அணைகள் மற்றும் குடிநீர் ஆதாரங்களிலும் தண்ணீர் அளவு அதிகரிக்கும்.

குறிப்பாக, குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் பல்வேறு இடங்களிலும் உள்ள மலைச்சரிவுகளில் புதிதாக நீரூற்று ஏற்பட்டு மலைச் சரிவுகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இது பார்ப்பதற்கு நீர்வீழ்ச்சி போல் காணப்படும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துச் செல்வது மட்டுமின்றி புகைப்படம் எடுத்துச் செல்வது வழக்கம். தற்போதைய பகுதிகளில் கன மழை பெய்து வரும் நிலையில் பல்வேறு இடங்களிலும் புதிதாக நீர்வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை