நீர்வளத்துறையின் பணிகள் நவீனமயம் பாசனத்திற்கு ரூ.6,607 கோடி ஒதுக்கீடு

சென்னை: அடுத்த 10 ஆண்டுகளில் 1,000 தடுப்பணைகளும், கதவணைகளும் கட்டப்படும். காவேரி டெல்டாப் பகுதியில் ஒன்பது மாவட்டங்களில் 647 சிறப்பு தூர்வாரும் பணிகள் ரூ.65.11 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளன.  * ஆனைமலையாறு, நீராறு-நல்லாறு, பாண்டியாறு-புனம்புழா திட்டம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்த் திட்டங்களைச் செயல்படுத்த, கேரள மாநிலத்துடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளில் அரசு ஈடுபடும். * பிரதமரின் வேளாண் நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் நீர்நிலைப் பகுதிகளைப் பழுது பார்த்தல், புதுப்பித்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளுக்காக 2021-22ம் ஆண்டில் ரூ.111.24 கோடி செலவில் 200 குளங்கள் தரம் உயர்த்தப்படும். 2021-22ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 50 குறு நீர்ப்பாசனக் குளங்களைத் தரப்படுத்துலுக்கான சிறப்புத் திட்டம் ஒன்று தமிழக அரசால் தொடங்கப்படும்.  * நீர்வளத் துறையின் பணிகள் நவீனமயமாக்கப்படும். ஆளில்லா விமானங்களின் மூலம் ஆய்வு, துல்லியமான புவியிடங்காட்டி மற்றும் புவியியல் தகவல் அமைப்பு போன்றவற்றின் உதவியுடன் பணிகள் மேம்படுத்தப்படும். தமிழ்நாடு நீர்வள தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு மொத்தம் ரூ.30 கோடி  செலவில் செயல்படுத்தப்படும்.  * கல்லணை கால்வாய் புதுப்பித்தல் விரிவுபடுத்துதல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்திற்கு ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிலிருந்து ரூ.2,639.15 கோடி நிதி உதவி பெறப்பட்டுள்ளது. இரண்டாவது அணை சீரமைத்தல் மற்றும் புதுப்பித்தல் திட்டமானது ரூ.610.26 கோடி செலவில் உலக வங்கியின் நிதியுதவியுடன் துவங்கப்படவுள்ளது.* பருவ நிலை மாற்றத்திற்கான தழுவல் திட்டத்தின் இரண்டாம் கட்டம், காவேரி டெல்டா பகுதியில் ரூ.1,825 கோடி மதிப்பீட்டில் ஆசிய வளர்ச்சி வங்கியின் உதவியுடன் மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் மூன்று, நான்காம் கட்டம் உலக வங்கியின் நிதி உதவியுடன் ரூ.779.89 கோடி செலவில் செயல்படுத்தப்படும். இந்த திருத்த வரவு செலவுத் திட்டத்தில் ரூ.326.37 கோடி இந்த திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தடுப்பணைகள், ஏரிகள், வடிகால்கள் மற்றும் பாசன அமைப்புகளின் புனரமைத்தல் உட்பட 59 புதிய பாசனப் பணிகள் நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டன. பாசனத்திற்காக மொத்தம் ரூ.6,607.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. …

Related posts

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ரயில்வே தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக பவள விழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டிகள்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருவொற்றியூர் 13வது வார்டில் இ-சேவை மையம் இடமாற்றத்தால் 3 கி.மீ அலையும் பொதுமக்கள்