நீட் தேர்வு ரத்து செய்ய எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைக்கும் அதிமுக ஆதரவு தரும்: ஓ.பி.எஸ் உறுதி

சென்னை: நீட் விலக்கு பெறுவதற்காக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஆதரவு தரும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது. நீட் தேர்வு ரத்து குறித்து ஏற்கனவே தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் அனைத்து கட்சி கூட்டத்திலும் அதிமுக நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டோம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தங்களின் 3.2:2022 நாளிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றேன். அதில் மருத்துவக் கல்வியில் சேருவதற்கான தேர்வில் இருந்து விலக்கு பெற வழிவகை செய்யும் சட்ட முன்வடியினை மறுபரிசீலனை செய்யும் பொருட்டு, வேதார் ஆளுநர்கள் தமிழ் நாடு அரசிற்கு திருப்பி அனுப்பியுள்ள நிலையில்  இது தொடர்பாக 5.2.2022 அன்று காலை 11 மணியளவில் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற இருக்கும் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை வழங்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் அனுப்பி வைக்குமாறு தாங்கள் கோரி உள்ளீர்கள்.’நீட் தேர்வு ரத்து ‘ குறித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் கருத்துகள் ஏற்கனவே தமிழ் நாடு சட்டமன்றும் பேராவையிலும், 08.1.2022 அன்று நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. எனவே நீட் தேர்வு ரத்து தொடர்பாக எடுக்கப்படும் அனைத்து சட்டப்படியான நடவடிக்கைக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்….

Related posts

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஆசிரியர் மீது போக்சோவில் வழக்கு..!!

காந்தி மண்டபம் பராமரிக்கப்படவில்லை என ஆளுநர் கூறும் குற்றச்சாட்டு தவறானது: அமைச்சர் ரகுபதி

கீழடி ஊராட்சி தலைவருக்கு சு.வெங்கடேசன் வாழ்த்து..!!